சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து: உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என எச்சரிக்கை

கோத்தகிரி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க தங்கள்


கோத்தகிரி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க தங்கள் கால்நடைகளை சாலைகளில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கோத்தகிரியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் பல முறை எச்சரித்தும் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:
கோத்தகிரியின் மிக முக்கிய பகுதிகளான ராம்சந்த், காமராஜர் சதுக்கம், கிளப்ரோடு, கார்சிலி, கடைவீதி சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில் இனி கால்நடைகளை சாலைகளில் திரியவிடும் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com