அட்மா திட்ட விவசாயிகள் பயிற்சி முகாம்

அட்மா திட்டத்தின் கீழ் விதை சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

அட்மா திட்டத்தின் கீழ் விதை சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் துர்காதேவி முன்னிலை வகித்தார். முகாமில், விதை பண்ணை அமைப்பதில் கொள்முதல் செய்யும் விதைகளுக்கு அரசு வழங்கும் மானியம், சொட்டுநீர் தெளிப்பு நீருக்கான மானியம் மற்றும் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
பயிர்க் காப்பீடு செய்ய வரும் 15-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அரசு விடுமுறை நாள்களிலும் விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொதுசேவை மையத்தில் காப்பீட்டு தொகையை செலுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் தெரிவித்தார்.
விதை சான்று நடைமுறைகள் சான்று பெற்ற விதைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், விதை நெல் உற்பத்தி தொடர்பான விவரங்களை விதை சான்று அலுவலர்கள் மணி, லதா மற்றும் மனோஜ் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
முகாமில் விதை ஆய்வாளர் கணேசன், துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல், தொழில்நுட்ப மேலாளர் விஜய்ஆனந்த், உதவி மேலாளர்கள் கோ.சங்கர், சித்ராதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com