குடியிருப்புப் பகுதியில் மத வழிபாட்டுக் கூடம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு

திருப்பூர் அருகே குடியிருப்புப் பகுதியில் மத வழிபாட்டுக் கூடம் அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

திருப்பூர் அருகே குடியிருப்புப் பகுதியில் மத வழிபாட்டுக் கூடம் அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து திருப்பூர், 3 செட்டிபாளையம், தியாகி குமரன் காலனி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனு விவரம்:
இப்பகுதியில், இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ பொது மக்கள் சுமுகமாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதியில் அவரவர் மதங்களுக்கு உண்டான வழிபாட்டுத் தலங்கள் ஏற்கெனவே உள்ளன. தற்போது குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்பினர்,  ஏற்கெனவே உள்ள பள்ளி வாசலுக்கு 150 அடி தொலைவிலும், இந்து கோயில்களில்   இருந்து  சுமார் 200 அடி தூரத்திலும் புதிதாக பள்ளிவாசல் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால்,   பதற்றங்களும், சட்டம், ஒழுங்குப் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும், லே-அவுட் மனையிடங்கள் அனைத்து குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டுமே அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு விரோதமாக,  வீட்டு உபயோகத்திற்காக இடம் கிரயம் செய்யப்பட்டு, தற்போது அங்கு மேற்கூறப்பட்ட அமைப்பினரால்  புதிதாக பள்ளிவாசல் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே,  இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com