கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும்: திருப்பூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலன் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாவது:
கோயில் வருமானத்தை கோயிலுக்கே செலவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள் பல ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
கோயில்களில் உள்ள கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். இதை அனைத்துக் கோயில்களிலும் அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் பேசினர்.
மாநிலச் செயலாளர்கள் ஜே.எஸ்.கிஷோர்குமார், தாமு ஜி.வெங்கடேஸ்வரன்,  நிர்வாகக் குழு உறுப்பினர் வி.எஸ்.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் 1,800-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வெள்ளக்கோவிலில் ஆர்ப்பாட்டம்: கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி,  வெள்ளக்கோவிலிலும்  இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com