மாதம் ஒரு முறை ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலுக்கு அனுமதி: மத்திய அமைச்சரிடம் சிஸ்மா கோரிக்கை

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாதம் ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று,  தென்னிந்திய காலர் சர்ட் மற்றும்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாதம் ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று,  தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடைகளுக்கான சிறு, குறு உற்பத்தியாளர்  சங்கம் (சிஸ்மா) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஸ்மா பொதுச்செயலாளர் கே.எஸ்.பாபுஜி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதியுள்ள கடித விவரம்:
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததிலிருந்து பின்னலாடைத் துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் முடங்கிக் கிடக்கின்றன. சிறு, குறு, நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள், இரண்டாம் தர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடுகிறது.
சிறு, குறு, நடுத்தர சார்பு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது எங்கள் துறை சார்ந்த கோரிக்கை. ரூ. 1.75 லட்சத்துக்குள் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு சதவீத வரி விதிப்பு என்ற அறிவிப்புக்குள் இரண்டாம் தர துணிகள், பனியன், சிறு வர்த்தகர்களைக் கொண்டுவர வேண்டும்.
பிராண்ட் பெயருடன் நடுத்தர பனியன் வர்த்தகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.க்குள் வரும்போது நூலுக்கு 5 சதவீதம் , துணிக்கு 5 சதவீதம், டையிங், காம்பேக்டிங் 5 சதவீதம், ஜாப் ஒர்க் 18 சதவீதம், பிரின்டிங், எம்ப்ராய்டரிங், காஜா பட்டன், செக்கிங், அயர்னிங், பேக்கிங் 18 சதவீதம், கார்மென்ட் 5 சதவீதம் என்று ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி, 18 சதவீதம் என்பதை 5 சதவீதமாக அனைவருக்கும் விதிக்கப்பட வேண்டும்.
மேலும், ஆரம்ப காலத்திலிருந்து வரி விதிப்பு இல்லாத துறைகளுக்கு முற்றிலும் வரி நீக்கம் செய்து தர வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான கணக்குகளை  மாதம் மும்முறை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்திருப்பதை
மாற்றி, பழைய நடைமுறை போல மாதம் ஒரு முறை கணக்குகளை தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இரண்டாம் தர குடோன்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று  கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com