சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தல்

சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழு சிறப்புப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழு சிறப்புப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சிறப்புப் பேரவை திருப்பூரில் அண்மையில் நடைபெற்றது.  நலக் குழுவின் அமைப்பாளர் அ.நிசார் அகமது தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் அமைப்பாளர் பி.மாரிமுத்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இதில்,  திருப்பூரில் பல இடங்களில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்கு உரிய அனுமதி கோரியும் அரசு அனுமதி தராமல் உள்ளது.  சில இடங்களில் வழிபாட்டுக்குத் தடை விதிக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையை மாற்றி சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும். தொழில் தொடங்க கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள இஸ்லாமியர்கள் பலருக்கு கடன் வழங்க மறுத்து அலைக்கழிக்கும் நிலை உள்ளது.  மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com