விவசாயிகள் நினைவிடத்தில் அஞ்சலி

பெருமாநல்லூரில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் நினைவிடத்தில் பல்வேறு விவசாய அமைப்பினர் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

பெருமாநல்லூரில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் நினைவிடத்தில் பல்வேறு விவசாய அமைப்பினர் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் 1970 ஜூன் 19-ஆம் தேதி, மின் கட்டணம் ஒரு பைசா உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மாரப்ப கவுண்டர், ராமசாமி கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய 3 விவசாயிகள் உயிரிழந்தனர்.  இவர்களது நினைவிடம் பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு விவசாய அமைப்பினர் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர். கொமதேக சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் ஜி.கே.விவசாய மணி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கச் செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி, அத்திக்கடவுப் போராட்டக் குழு சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com