அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 100 பேர் கைது

தாராபுரத்தில் காவல் துறையினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 100 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தாராபுரத்தில் காவல் துறையினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 100 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தாராபுரம் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது காவல் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ளும் வகையில் 107 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்குப் பதிவு செய்தது தவறு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் மீது 122 பிரிவின் கீழ் காவல் துறையினர் மீண்டும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைக் கண்டித்து தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணியினர் காவல் துறையினரிடம் அனுமதி கோரினர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் புதிய காவல் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் காவல் துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. இதனைக் கண்டித்து வரும் 31-ஆம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உளவுத் துறை செயல் இழந்துவிட்டது.
தமிழகத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், பொய் வழக்குகள் போடப்படுவதும் கண்டிக்கத்தக்கது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com