சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு மே 25-இல் தொடக்கம்

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி காலை தொடங்கி நடைபெறுகிறது.

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி காலை தொடங்கி நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கே.சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2017-18-ஆம் கல்வியாண்டின் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 5-ஆம் தேதி வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும், தொடர்ந்து 26, 29, 30-ஆம் தேதிகளில் காலை முதல் மாலை வரை நடைபெறும்.
ஆங்கில இலக்கியம் பட்டப் படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். பிற பட்டப் படிப்பு பயில விரும்பும் மாணவர்கள், மொழிப் பாடங்களைத் தவிர, பிற பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வு முற்றிலும் கணினி முறையில் நடைபெறவுள்ளது.
அதன்படி, மொழிப் பாடங்கள் இல்லாமல் 675-க்கு மேல் பெற்ற மாணவர்கள் 25-ஆம் தேதியும், 550-க்கு மேல் பெற்றவர்கள் 26-ஆம் தேதியும், 450-க்கு மேல் பெற்றவர்கள் 29-ஆம் தேதியும், அதற்கு கீழ் பெற்றவர்கள் 30-ஆம் தேதியும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பதிவிறக்கம் செய்யப்பட்ட 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று அசல் மற்றும் நகல், புகைப்படம் 2 கொண்டு வர வேண்டும். கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தவர்கள் அன்றைய தினமே உரிய கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com