உடுமலை அரசு மருத்துவமனையில் முறைகேடு: ஆர்டிஓ விசாரணை

உடுமலை அரசு மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய்க் கோ ட்டாட்சியர் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.

உடுமலை அரசு மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய்க் கோ ட்டாட்சியர் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.
உடுமலை அரசு மருத்துவமனையில் பல ஆயிரம் புற நோயாளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான உள் நோயாளிகளுக்கு தினமும் சிகிச்சைகள் வழங்கப் பட்டு வருகின்றன. நோயாளிகளின் நலனை முன்னிட்டு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நோயாளிகள் நலச் சங்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அமைப் பின் ஆலோசனைக் கூட்டம் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் பி.மாரியம்மாள் முன்னிலை வகித்தார். அரசு வழக்குரைஞர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சாஸ்திரி சீனிவாசன், தொழிலதிபர் ஏவிஎம்.தங்கமணி, ரோட்டரி சங்கத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர் கலந்து கொண்டனர்.
இதில் நோயாளிகள் நலச் சங்கத்தின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடுகள், மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய ப்பட் டன. அப்போது இது குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் இளநிலை நிர்வாக அலுவலர் ஜெபராஜிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதில் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் கொள்முதல் செய்தது, மருத்துவமனை மின் இணைப்புக்கு பணம் செலுத்தியது, நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்ததில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு அலுவலர்கள் முறையாக பதில் அளிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த விசாரணையில் நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர்களுக்கு தெரியாமல் செலவுகள் செய்திருப்பதும் மேலும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து கணக்குகள் மற்றும் அதற்குரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் நிர்வாகிகளிடம் உத்தரவிட்டார்.
இது குறித்து கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நோயாளிகள் நலச் சங்க நிதிகளை கையாண்டதில் முறைகேடுகள் நடந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழு அனுமதியி ல்லாமல் பல்வேறு நிதிகள் கையாளப்பட்டுள்ளன. அனைத்து கணக்குகளையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன் பின்னர் மருத்துவமனையில் மேற்கொண்டு வரும் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com