முறைகேடான பயன்பாடு: பல ஆண்டு கால பொது மின் இணைப்புகள் துண்டிப்பு

வெள்ளக்கோவில் பகுதியில் முறைகேடான பயன்பாடு காரணமாக,  பல ஆண்டு காலப் பொது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளக்கோவில் பகுதியில் முறைகேடான பயன்பாடு காரணமாக,  பல ஆண்டு காலப் பொது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் மக்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும், பொழுது போக்குக்காகவும் கிராமப்புறங்கள் உள்பட பல ஊர்களுக்கு அரசு சார்பில் ரேடியோக்கள் வழங்கப்பட்டன. அவற்றை வைப்பதற்காகப் பொது இடங்களில் அறை கட்டப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் மின் இணைப்புகள் பெறப்பட்டன.
அப்போது மின்சாரத்தை அதிகம் பேர் பயன்படுத்த வசதியில்லாத நிலையில், அவை ரேடியோ (கரண்ட்) சர்வீஸ் என பிரபலமாக இருந்தன. இதற்கான மின் கட்டணத்தை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் செலுத்திப் பராமரித்து வந்தன.
பின்னர், இதேபோல பொதுத் தொலைக்காட்சி அறைகள் அமைக்கப்பட்டன.  கால மாற்றத்தில் பொது ரேடியோ, பொது தொலைக்காட்சிப் பெட்டிகள் அறவே இல்லாமல் போயின.
ஆனால், துண்டிக்கப்படாமல் இருந்த அந்த மின் இணைப்புகளை கோயில்கள், பொது நிகழ்ச்சிகள், பொது கிணறுகளில் மோட்டார் இயக்குவதற்கு என பல்வேறு பணிகளுக்கு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இவற்றுக்கான ஆயிரக்கணக்கான ரூபாய் மின் கட்டணத்தையும் உள்ளாட்சி அமைப்புகள் செலுத்திவந்தன.
தற்போது தெருவிளக்குகள், பொதுக் குடிநீர் மோட்டார்களின் மின் பராமரிப்பு ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களது கண்காணிப்பில் பொது மின் இணைப்புகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மின் கட்டணம் செலுத்துவது நிறுத்தப்பட்டது.
பணம் கட்டாததால் இவ்வாறான பல மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com