உலக புத்தக தினம்: மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி

உலக புத்தகத் தினத்தையொட்டி, உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடை பெற்றது.

உலக புத்தகத் தினத்தையொட்டி, உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடை பெற்றது.
இந்த நூலகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தக தினத்தை ஒட்டி மொத்தம் 6 நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நிகழ்ச்சியாக உடுமலை நகராட்சி விரிவாக்க நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நான் விரும்பும் நூல் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், இயற்கையை நேசிப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும்  நடத்தப்பட்டது. போட்டியைத் தலைமை ஆசிரியர் புனிதா தொடங்கிவைத்தார். நூலகர் கணேசன் தலைமை வகித்தார்.
இரண்டாவது நிகழ்ச்சியாக  உடுமலை ருத்ரப்ப நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி வியாழக்கிழமை நடை பெற்றன. இதைத் தொடர்ந்து  ஏப்ரல் 23 ஆம் தேதி வரை அறிவியல் கண்காட்சி மற்றும் வட்டார அளவில் திறனறிப் போட்டிகள் நடைபெற உள்ளன. நூலகர்கள் அருள் மொழி, செல்வராணி, கணினிப் பணியாளர் தெய்வமணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com