தாராபுரத்தில் 1,10,008 சிவலிங்கங்களுடன் சிறப்பு பூஜை

உலக அமைதி வேண்டியும், சிவராத்திரியை முன்னிட்டும், தாராபுரத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 8 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

உலக அமைதி வேண்டியும், சிவராத்திரியை முன்னிட்டும், தாராபுரத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 8 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மடத்தில் வனிதா, வாசவி அமைப்புகள் சார்பில் இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதற்கென சந்தனம், அரிசி மாவு கலந்து 1 லட்சத்து 10 ஆயிரத்து 8 சிவலிங்கங்களை செய்யும் பணியில் கடந்த 2 மாதங்களாக பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.
சிவராத்திரி தினமான செவ்வாய்க்கிழமை லிங்கங்கள் அனைத்தும் மடத்துக்குக் கொண்டுவரப்பட்டு சிவலிங்கம் வடிவில் வைக்கப்பட்டது. அதன்பின்னர், அலங்கரிக்கப்பட்ட சிவன், பார்வதி சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த பூஜையில் திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் பங்கேற்றனர். இதனை "ஒண்டர்புக் ரெக்கார்டு' நிறுவனத்தினர் பார்வையிட்டு சாதனைச் சான்றிதழ் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com