உ.பி.யில் பின்னலாடை  தொழில் தொடங்க அழைப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் சலுகைகள் அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் தொழில் தொடங்கிட திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தொழில் தொடங்கிட திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பின்னலாடைத் துறையில் சர்வதேச அளவில் திருப்பூர் தனி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொழில் தொடங்க திருப்பூர் தொழில்துறையினருக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் தொடர்ந்து அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொழில்துறையினரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க அழைக்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், உத்தரப்பிரதேச அரசு சார்பில் அம் மாநில முதல்வரின் தலைமைச் செயலர் மிருத்யன் ஜய்குமார் நாராயண், ஜவுளித் துறை துணை ஆணையர் சுனில் யாதவ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு, திருப்பூர் தொழில் துறையினருடன்ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக, கூட்டத்துக்கு சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் தலைமை வகித்தார். செயலர் வி.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். திருப்பூரைச் சேர்ந்த தொழில் துறையினர் பலர் கலந்து கொண்டனர். இதில், உத்தரப்பிரதேச மாநில ஜவுளிக் கொள்கை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு தொழில் தொடங்க வரும் தொழில் துறையினருக்கு நிறுவனம் அமையும் இட மதிப்பில் 50 சதவீதமும், முதலீட்டில் 25 சதவீதமும், வங்கிக் கடன் வாங்கினால் 7 ஆண்டுகளுக்கு வட்டித் தொகையில் 50 சதவீதமும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 50 சதவீதம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சலுகைகள் அறிவித்து அழைப்பு விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com