அவிநாசி அருகே பேருந்து உள்பட 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவ்வழியாக வந்த 4 கார்கள்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவ்வழியாக வந்த 4 கார்கள்,  தனியார் பேருந்து ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இதில் 10- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவிநாசியில் இருந்து கோவை நோக்கி சரக்கு ஆட்டோ திங்கள்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. தெக்கலூர் அருகே புறவழிச்சாலையில் செல்லும்போது நிலைதடுமாறிய சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வேகமாக வந்த 4 கார்களும் அடுத்தடுத்து மோதின. 
மேலும் கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து அங்கு நின்றிருந்த 4 கார்கள் மீதும் மோதியது. இதில் பேருந்து உள்பட 5 வாகனங்களிலும் வந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் திருப்பூர், கோவை, அவிநாசி உள்ளிட்ட தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  
இதில் கோபி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (36) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com