ரூ.8.83 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.83 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏல விற்பனை வியாழக்கிழமை  நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.83 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏல விற்பனை வியாழக்கிழமை  நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, 509 மூட்டைகளில் 24 ஆயிரத்து 931 கிலோ சூரியகாந்தி விதை கொண்டு வரப்பட்டது.
இதில் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 32.39-க்கும், அதிகபட்சமாக ரூ.36.89  வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 445-க்கு விற்பனை நடைபெற்றது. 
மதுரை விராலிப்பட்டி, திண்டுக்கல், நத்தம், பல்லாநத்தம், முத்தூர், ஆலாம்பாளையம், தொட்டியபாளையம், மலையாத்தாபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 27 விவசாயிகளும்,  ஈரோடு, கோபி, காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூரிலிருந்து 6 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.
 விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் மேற்பார்வையில் விற்பனைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com