மானிய நிதிச் செலவினம்: ஆசிரியர்களுக்குப் பயிற்சி

வெள்ளக்கோவில் வட்டார வள மையத்தில் மானிய நிதிச் செலவின வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் வட்டார வள மையத்தில் மானிய நிதிச் செலவின வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
 ஒன்றியத்தைச் சேர்ந்த 16 அரசு நடுநிலைப் பள்ளிகள், 40 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாகப் பள்ளிகளுக்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.  இதில், கற்றல் - கற்பித்தல் பொருள்கள், குடிநீர், கழிப்பிட வசதி, மின்சார வசதி, பதிவேடுகள் வாங்குவது, பள்ளி பராமரிப்புப் பணி போன்றவற்றுக்கு நிதியைப் பயன்படுத்தலாம் என வட்டார வள மைய மேற்பார்வையாளர் விமலா எஸ்தர் ராணி குறிப்பிட்டார்.  இப்பயிற்சியில், மானியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி, ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com