புரட்டாசி சனிக்கிழமை  பெருமாள் மலை கோயிலில் பக்தர்கள் தரிசனம்

காங்கயம் அருகே பெருமாள் மலையில் உள்ள பிரசன்ன வெங்கட ரமணர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி 

காங்கயம் அருகே பெருமாள் மலையில் உள்ள பிரசன்ன வெங்கட ரமணர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காங்கயம் அடுத்துள்ள பெருமாள் மலையில் பிரசன்ன வெங்கட ரமணர் மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும். இந்த ஆண்டு புரட்டாசி கடைசி சனிக்கிழமை பூஜை அக்டோபக் 13இல் நடந்தது. இதனால் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.  பூலோக நாயகி சமேத பிரசன்ன வெங்கட ரமணர் மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  காங்கயம், சிவன்மலை, திருப்பூர், ஊதியூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com