மேலூர் பொதுக்கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும்

மேலூரில் திங்கள்கிழமை (ஆக.14) நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அதிமுக அமைப்புச்

மேலூரில் திங்கள்கிழமை (ஆக.14) நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அதிமுக அமைப்புச் செயலராக டி.டி.வி. தினகரனால் அண்மையில் அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பி. பழனியப்பன் தெரிவித்தார்.
தருமபுரியில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் பற்றி இதுவரை அமைச்சர்கள் மட்டுமே கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால், இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எதுவும் சொல்லாமல், தில்லிக்குச் சென்று துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனை விமர்சித்துள்ளது கண்டனத்திற்குரியது.
தேர்தல் ஆணையத்தில் சசிகலா பொதுச் செயலர் என்றும், தினகரன் துணைப் பொதுச் செயலர் என்றும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, இப்போது விலக்கி வைக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் எப்படி தன்னிச்சையாகச் செயல்பட முடியும்?
குழம்பியுள்ள தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களை கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார். மதுரை மேலூரில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள விழா, திருப்புமுனையை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பிறகு தான் எடப்பாடி அரசு வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்கிறது. மீண்டும் ஒரு தீர்மானத்தை அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு தான் கொண்டு வர முடியும் என்றார் பழனியப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com