மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: தெலங்கானா காங்கிரஸ் பொதுச் செயலர் கடுகு கங்காதர்

மத்திய அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெலங்கானா காங்கிரஸ் பொதுச் செயலர் கடுகு கங்காதர் தெரிவித்தார்.

மத்திய அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெலங்கானா காங்கிரஸ் பொதுச் செயலர் கடுகு கங்காதர் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புத் தருவதாக பாஜகவினர் தெரிவித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் வேலைவாய்ப்புகள் தரப்படவில்லை. மேலும், வாக்குறுதிகளுக்கு மாறாக, மதவாத அரசியலை முன்னெடுக்கிறது. மானியங்களை ரத்து செய்வது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
 காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி, உள்கட்சித் தேர்தலுக்கு பின் தலைவராக வருவார். அவரது தலைமையில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். ராகுல் காந்தி பிரதமராவது உறுதி.
 தற்போது, காங்கிரஸ் கட்சியில் உள்கட்சித் தேர்தல் நடத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தருமபுரி மாவட்டத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்துள்ளனர். கடந்த 4 நாள்களாக தருமபுரியில் ஊராட்சி, பேரூர், நகரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதி நிர்வாகிகளையும் சந்தித்து, உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதில், தற்போது வரை தருமபுரி மாவட்டத்தில் 50,225 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 இதுதொடர்பாக, மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, மாவட்ட முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் நாகராஜ், மோகன், கே.வி.சித்தையன் ஆகியோர் அடங்கிய குழு பரிசீலனை செய்து, அனைத்து உறுப்பினர்களையும் ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
 இவை அனைத்தும் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கனுமூரி பாபிராஜுடம் சமர்ப்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, வரும் ஆக.26-ஆம் தேதி உள்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும். வருங்காலங்களில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com