உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என இந்திய குடியரசு கட்சி (பி.வி.கே அணி) வலியுறுத்தியது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என இந்திய குடியரசு கட்சி (பி.வி.கே அணி) வலியுறுத்தியது.
 அந்தக் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அரூரில் இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
 தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், மக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகள் முறையாக கிடைப்பதில்லை. எனவே, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த
 வேண்டும்.
 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை அரசு மீட்டு நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
 நிறைவேற்றப்பட்டன.
 இதில், கட்சியின் மாநிலத் தலைவர் பி.வி.கரியமால், மாநில செயல் தலைவர் கே.கருமலை, மாநில பொதுச்செயலர் கே.அரங்கசாமி, மாவட்டத் தலைவர் கே.சிவநாதன், மாவட்டச் செயலர் ஆர்.ராமு, மாவட்டப் பொருளாளர் ஏ.சண்முகம், ஒன்றிய அமைப்பாளர்கள் சி.சுரேஷ், டி.கோபிசந்திரன் உள்ளிட்டோர்
 கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com