எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளை துவக்க ஆலோசனை கூட்டம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளையை துவக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊத்தங்கரையில் புதன்கிழமை நடைபெற்றது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளையை துவக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊத்தங்கரையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற துவக்க ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அறக்கட்டளையின் தலைவராக ஆடிட்டர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். முன்னதாக அறக்கட்டளையின் இலட்சினை அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரின் கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஒவ்வொர் ஆண்டும் தைத் திங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்துவது, பட்டிமன்றம், பாட்டுமன்றம், தனியுரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, ஜனவரி 28-ஆம் தேதி ஊத்தங்கரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் துவக்க விழா நடத்துவது, அறக்கட்டளையின் தலைமை பொறுப்புகளுக்கு இளைஞர்களையே முன்னிறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com