ஆழிவாயன்கொட்டாய் மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி செல்லும் வழியிலுள்ள ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தில்

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி செல்லும் வழியிலுள்ள ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தில் ஓம் சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 18ஆம் ஆண்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
 தருமபுரி மாவட்டம், ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவே அமைந்துள்ளது ஓம்சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயில். சுற்றுவட்டார 18 கிராம மக்களுக்குச் சொந்தமான கோயில் இது.
 ஆண்டுதோறும், ஆடி முதல் நாளில் இக்கோயில் திருவிழாவில் வழிபாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். இதன்படி, நிகழாண்டு ஆடி முதல் நாளான திங்கள்கிழமை பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் திருவிழா நடைபெற்றது.
 அனுமந்தபுரம் முதல் மாரியம்மன் கோயில் வரை பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மஞ்சள் நீராட்டி சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்டது.
 இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட தாற்காலிக கடைகளும், சிறார்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com