ஐடிஐயில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

தொழிற்பயிற்சி நிலையத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, தருமபுரி, கடகத்தூர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஏ.வி.ஜெகநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி, கடகத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கையின் முதல் கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களுக்கு இணையதளம் மூலமாக ஜூலை 17 முதல் வரும் ஆகஸ்ட் 10}ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்து பயிற்சியில் சேர இயலாதோர், விண்ணப்பிக்க தவறியவர்கள்  www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
14 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14. உச்ச வயது வரம்பில்லை. அனைத்து மாவட்டங்களிலும் சேர்க்கைக் கலந்தாய்வு ஒரே நாளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
பயிற்சிக் காலத்தில், மாதந்தோறும் ரூ. 500 உதவித் தொகையாக வழங்கப்படும். இதைத் தவிர, விலையில்லாப் பாடப் புத்தகம், வரைபடக் கருவிகள், மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்துப் பயண அட்டை வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ளஅனைத்து மாணவ, மாணவியரும், தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 04348 } 235323 என்ற தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com