பென்னாகரம் அரசு மருத்துவமனையில் "டயாலிசிஸ்' பிரிவு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக இரு "டயாலிசிஸ்' பிரிவு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக இரு "டயாலிசிஸ்' பிரிவு மற்றும் பாலக்கோடு, அரூர், பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் அóம்மா ஆரோக்கியா திட்டத்தை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
 அப்போது அவர் பேசியது:
 மாவட்டத்தில் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நோயாளிகள் தற்போது சேலத்துக்கும், பெங்களூருக்கும் சென்று வந்து கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக இரு டயாலிசிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 6 முதல் 10 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். "அம்மா ஆரோக்கியா' திட்டம் தமிழ்நாட்டில் 98 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், அரூர் ஆகிய மருத்துவமனைகளில் தொடங்கப்படுகிறது.
 இத்திட்டத்தில் ரூ. 3,500 மதிப்பிலான 25 வகையான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இப்பரிசோதனை செய்யப்படும் என்றார் அன்பழகன்.
 விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். அரூர் கோட்டாட்சியர் கவிதா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பொன்னுராஜ், பாலக்கோடு மகப்பேறு மருத்துவர் டாக்டர் மணிமேகலை, பென்னாகரம் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கனிமொழி, அரூர் முதன்மை மருத்துவர் டாக்டர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com