அறிவியல் ஆசிரியர்களுக்கு மண்டல பயிற்சி தொடக்கம்

தருமபுரியில் அறிவியல் பாடத்துக்கான மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி, வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது.

தருமபுரியில் அறிவியல் பாடத்துக்கான மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி, வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
 இப்பயிற்சி முகாமை தொடக்கி வைத்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி பேசியது: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளன.
 இப்பயிற்சி மூலம், கற்பித்தல் முறையில் மாற்றம் உருவாக்கப்பட்டு மாணவர்கள் பாடப் பொருளைப் புரிந்து கற்க இயலும். அறிவியல் விதிகளை செய்து கற்பதன் மூலம் எளிதில் புரிந்து கொள்ளவும், அவர்கள் மனதில் அக்கருத்துகள் ஆழமாகப் பதியும். இதன் மூலம், மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மை உருவாகும். இன்றைய சமூகத்திற்கு தேவையான சுற்றுச்சூழல், சுகாதாரம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளத்தக்க வகையில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். கற்றலை மாணவர்களுக்கு மகிழ்வான நிகழ்வாக மாற்ற வேண்டும். அறிவியல் கருத்துகளை எளிமையாக வாழ்க்கையோடு தொடர்புப் படுத்தி விளக்க வேண்டும்.
 ஆசிரியர்கள் இதுபோன்ற பணியிடைப் பயிற்சிகளை, சிறந்த முறையில் பயன்படுத்தி அதைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டும் என்றார்.
 வரும் ஜூன் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப் பயிற்சியில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 250 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 கல்லூரித் தலைவர் எம்.வடிவேலன், துணைத் தலைவர் வினோத் வெற்றிவேல், முதன்மைக் கருத்தாளர்கள் கோபால், முருகவேணி, மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com