தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை தொடக்கம்

சாதி, மதவெறி நடவடிக்கைகளை எதிர்த்து மக்களிடம் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில், சமூக நல்லிணக்க மேடை அமைப்பு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.

சாதி, மதவெறி நடவடிக்கைகளை எதிர்த்து மக்களிடம் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில், சமூக நல்லிணக்க மேடை அமைப்பு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
 தருமபுரி சிஐடியூ தொழிற்சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான கலந்துரையாடல் கூட்டத்துக்கு, ஓய்வுபெற்ற பேராசிரியர் இ.பி. பெருமாள் தலைமை வகித்தார்.
 பாரதி புத்தகாலய நிர்வாகி இரா. சிசுபாலன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் என். குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ. குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ். தேவராசன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பொ.மு. நந்தன், காங்கிரஸ் சார்பில் பாடி நாகராஜன், தமுமுக சார்பில் சாதிக் பாட்ஷா, மமக சார்பில் சுபேதார், முஸ்லீம் லீக் சார்பில் அன்வர்பாட்ஷா, ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகர், பேராசிரியர் சீனிவாசன், பாதிரியார் சர்க்கரையாஸ், தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
 தருமபுரி மாவட்ட சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற பேராசிரியர் இ.பி. பெருமாள் தேர்வு செய்யப்பட்டார்.
 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
 வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனிதச் சங்கிலி நடத்துவது. வரும் ஆக. 15 விடுதலைத் திருநாளையொட்டி சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளை நடத்துவது. பெண்கள் மத்தியில் மதச்சார்பற்ற கருத்துகளை முன்வைப்பது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com