நல்லம்பள்ளி அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி அருகே உள்ள நார்த்தம்பட்டியில் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப் பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஒகேனக்கல் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், நல்லம்பள்ளி சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, அதியமான்கோட்டை போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இதில், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி, முறைகேடாக மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீட் தேர்வில் விஜய் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
 தருமபுரியைச் சேர்ந்த ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் 4 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
550 மதிப்பெண்கள் பெற்று வி. செளந்தர்யா, 360 மதிப்பெண் பெற்று எஸ். வெற்றிவேல், 320 மதிப்பெண் பெற்று எஸ். லட்சுமி, 319 மதிப்பெண்கள் பெற்று எஸ். சபரிநாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் மிகச்சிறந்த 10 கல்லூரிகளில் இவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பள்ளியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் மாணவர்களைப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com