குடிநீர் தட்டுப்பாடு: ஊராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

தருமபுரி அருகே பாகலஅள்ளி, இந்திரா நகர் மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு புதன்கிழமை பொதுமக்கள் காலி குடங்களுடன் கெங்கலாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி அருகே பாகலஅள்ளி, இந்திரா நகர் மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு புதன்கிழமை பொதுமக்கள் காலி குடங்களுடன் கெங்கலாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 குடிநீர் வழங்குவதை நிறுத்திய ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டிப்பது, கழிவுநீர்க் கால்வாய் அமைக்கக் கோருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோருவது என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
 கிராமப் பெண்கள் அனைவரும் காலி குடங்களுடன் இந்தப் போராட்டத்துக்கு வந்திருந்தனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 பொன்னேரியில்... பொன்னேரி ஊராட்சிக்குள்பட்டது எம்.தாதம்பட்டி (முத்தானூர்) கிராமம். இந்த ஊரில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 60 ஆயிரம் லிட்டர், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் உள்ளன. கிராம மக்களுக்கு அங்குள்ள திறந்தவெளி கிணற்றில் மின் மோட்டார் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது வந்தது. தற்போது கிணறு வறண்டுள்ளது.
 இந்தக் கிராமத்துக்கு தினமும் 34 ஆயிரம் லிட்டர் குடிநீர் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்பட வேண்டும். ஆனால் குடிநீர் வழங்கப்படவில்லைவில்லை.
 இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அரூர்-தீர்த்தமலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
 அதிகாரிகள் வாகனம் முற்றுகை: தருமபுரி மாவட்டம், மோட்டாங்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்டது நத்தமேடு கிராமம். இந்த ஊரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 15 நாள்களுக்கு ஒரு முறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
 இந்த நிலையில், இந்த ஊராட்சியில் நடைபெறும் திட்டப் ப ணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தருமபுரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் (தணிக்கை) பழனிசாமி, ஒன்றியப் பொறியாளர் துரைசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் வாகனத்தில் சென்றிருந்தனர். இதையறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
 பொதுமக்கள் கூறியது: நத்தமேடு கிராமத்தில் 18 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மின்சார இணைப்புகளுடன் உள்ளது. இதில் கிணற்றில் இருந்த குழாய்கள் அனைத்தும் முறைகேடாக எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாகாவும். இதனால் ஆழ்துளைக் கிணறுகளில் குடிநீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியவில்லை என கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அதிகாரிகளின் வாகனம் செல்ல கிராம மக்கள் அனுமதித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com