ஒகேனக்கல்லில் குப்பைகள் அகற்ற பாஜக வலியுறுத்தல்

ஒகேனக்கல்லில் குப்பைகளை அகற்றிட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

ஒகேனக்கல்லில் குப்பைகளை அகற்றிட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றிய பா.ஜ.க. செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பென்னாகரம் நகரத் தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய பொதுச் செயலர் முருகேசன், மாவட்டச் செயலர் ரமேஷ்வர்மா ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்தில், பென்னாகரத்திலிருந்து கூத்தப்பாடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com