பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தர்னா

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தருமபுரி பாரதிபுரம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புதன்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தருமபுரி பாரதிபுரம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புதன்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
 என்.எப்.டி.இ. மற்றும் டி.எம்.டி.சி.எல்.யு. சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு, ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பாரதிதாசன் தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி. முனிவேல் தொடங்கி வைத்துப் பேசினார். மாநில அமைப்பாளர் வீரமணி, என்.எப்.டி.இ. மாவட்டத் தலைவர் பத்மநாபன், செயலர் விஸ்வநாதன், பொருளாளர் மாது உள்ளிட்டோர் பேசினர்.
 தர்னா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: தொலைத்தொடர்புத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸôக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பணித் தன்மைக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும்.
 ஒப்பந்தத் தொழிலாளர் அலுவலகத்தை மாவட்ட பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு அருகேயே அமைக்க வேண்டும். தொடர்பு அலுவலர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com