மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க வழிமுறைகள்

மழைக் காலங்களில் மின் விபத்துகளைத் தவிர்க்கும் வகையிலான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் தீ.சிவானந்தன் அறிவித்துள்ளார்.

மழைக் காலங்களில் மின் விபத்துகளைத் தவிர்க்கும் வகையிலான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் தீ.சிவானந்தன் அறிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி: மின்பாதையின் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அவற்றைத் தொடாமலும், அருகில் செல்லாமலும் இருக்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் பழுதடைந்திருந்தாலும், சாய்ந்திருந்தாலும் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
 கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது இழுவைக் கம்பியிலோ கட்டக் கூடாது. மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி எந்த வேலையும் செய்யக் கூடாது. மின்வாரியப் பணியாளர்கள் மட்டுமே மின்தடை பணிகளை சீரமைக்க வேண்டும்.
 டிராக்டர், லாரியில் கரும்பு உள்ளிட்டவற்றை உயரமாக ஏற்றிச் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். மின்பாதைக்கு அருகில் கட்டடம் கட்டும்போது போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும். திருவிழாக் காலங்களில் தேரோட்ட நிகழ்ச்சிக்கு முன் மின்வாரிய அலுவலகத்திலிருந்து உரிய அனுமதி பெற வேண்டும்.
 உயரமான வாகனங்ள், டிப்பர் லாரிகளை மின்கம்பிகளுக்கு கீழே இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். வயல்களில் மின்வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றாகும். பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களை அந்தந்தப் பகுதி செயற்பொறியாளர்கள், உதவிச் செயற்பொறியாளர்களுக்கு தொலைபேசியிலும் தெரிவிக்கலாம்.
 தொடர்பு எண்கள்- தருமபுரி செயற்பொறியாளர்- 94458 55411, உதவி செயற்பொறியாளர்- 94458 55424, தருமபுரி கிராம உதவி செயற்பொறியாளர்- 94458 55412, அதியமான்கோட்டை உதவி செயற்பொறியாளர்- 94458 55418, பென்னாகரம் உதவி செயற்பொறியாளர்- 94458
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com