பழுதடைந்த நிலையில் ஜக்கசமுத்திரம் கிளை நூலகம்!

பழுதடைந்த நிலையில் உள்ள ஜக்கசமுத்திரம் கிளை நூலகக் கட்டடத்தை, விரைந்து புனரைமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதடைந்த நிலையில் உள்ள ஜக்கசமுத்திரம் கிளை நூலகக் கட்டடத்தை, விரைந்து புனரைமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது ஜக்கசமுத்திரம். இக்கிராமத்தில் கடந்த 1962-இல் கிளை நூலகம் திறக்கப்பட்டது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள இந்த நூலகத்தில், 1,523 பேர் உறுப்பினர்களாவும், சுமார் 25 பேர் புரவலர்களாகவும் உள்ளனர். இந்த நூலகத்துக்கு அருகில் ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இந்த நூலகக் கட்டடம், போதிய பராமரிப்பின்றி தரை முழுவதும் சேதமடைந்துள்ளது. அதே போல, மேற்கூரை முற்றிலும் விழுந்து கம்பிகள் மட்டுமே உள்ளன. மேலும், மழைக் காலங்களில் கட்டடத்தின் கூரையில் தண்ணீர் தேங்கி கட்டடத்தின் உள்ளே விழுவதால், புத்தகங்கள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆபத்தான நிலையில் உள்ள இக்கட்டடத்தை சுற்றி அதிகளவில் முள்புதர்கள் வளர்ந்து காடு போல காட்சியளிக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே, இந்த நூலகக் கட்டடத்தை விரைந்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com