விடைத்தாள்களை பகுதியாக மதிப்பீடு செய்த 130 ஆசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ்: திரும்பப் பெறக்  கோரி ஆர்ப்பாட்டம்

பொதுத் தேர்வு விடைத்தாள்களை பகுதியாக மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி, கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பொதுத் தேர்வு விடைத்தாள்களை பகுதியாக மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி, கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைக் கண்டித்தும், கடிதத்தை திரும்பப் பெறக்கோரியும் ஆசிரியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில், அண்மையில் நடந்து முடிந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு (திருத்தும்) செய்யும் பணி தருமபுரி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஏப்.11-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று
வருகிறது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, முதுநிலை ஆசிரியர் கழகத்தினர், கடந்த 2009 ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்களுக்கு ஒதுக்கப்பட விடைத்தாள்களில் 50 சதவீதத்தை  மட்டுமே திருத்துவோம் என ஏற்கெனவே கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் வழங்கியிருந்தனர். இதனடிப்படையில், கடந்த மூன்று நாள்களாக 50 சதவீதம் விடைத்தாள்களை மட்டுமே திருத்திய ஆசிரியர்கள்,  மீதமுள்ள விடைத்தாள்களை திருப்பி அளித்தனர்.
இந்த நிலையில், ஏப்.16-ஆம் தேதி மூன்று நாள்களாக, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிலுவை வைத்திருந்த 130 ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி,  மாவட்ட கல்வித் துறை சார்பில், நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கல்வித் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து, விடைத்தாள்கள் மதிப்பீடு மையம் முன்பு,  ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விளக்கம் கோரி, வழங்கிய நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும். ஊதிய முரண்பாட உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் காவேரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் சேகர், மாவட்டச் செயலர் அருண்குமார், பொருளாளர் ஆரோக்கியம், அமைப்புச் செயலர் நாகேந்திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com