கோபிநாதம்பட்டி பாலத்தின்  தடுப்புச் சுவரை சீரமைக்க வலியுறுத்தல்

அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரை . சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரை . சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் வாணியாற்றின் குறுக்கே உயர் பாலம் கட்டப்பட்டுள்ளது.  இந்த வழித்தடத்தில் சேலம், ஈரோடு, கோவை, சென்னை, திருவண்ணாமலை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. 
இந்த பாலம் மிகவும் பழமையானது என்பதால் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதேபோல், பாலத்தின் தடுப்புச் சுவர் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளது. இப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என்பது  பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com