தருமபுரியில் உகாதி திருவிழா

தருமபுரி மாவட்ட அனைத்து நாயுடுகள் மஹாஜன நலச் சங்கம் சார்பில் 21-ஆம் ஆண்டு உகாதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட அனைத்து நாயுடுகள் மஹாஜன நலச் சங்கம் சார்பில் 21-ஆம் ஆண்டு உகாதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் டி.ஜி. வெங்கடேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் கெளரவத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கே. பாண்டுரங்கன் மற்றும் டி.ஜி. மணிவேல், டாக்டர் எம். ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தமிழ்த் துறை இயக்குநர் டி. கணேசன் உள்ளிட்டோர் பேசினர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஒசூரில்...
ஒசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெலுங்கு, கன்னடம்  மொழிப் பேசும் மக்கள் பெருமளவில் வசித்து  வருகின்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை உகாதி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். வீடுகளின் முன் வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். புத்தாடை  அணிந்து சுவாமியை வழிபட்டனர்.
இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் வேப்பஇலை, வெல்லம் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து, வீடுகளில் ஒப்புட்டு எனப்படும் இனிப்பு பலகாரத்தை செய்து சாப்பிட்டும், அக்கம் பக்கத்தினர், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். 
இதையொட்டி, மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோயில் உள்பட ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com