இயற்கை விவசாயம்: வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு

அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவிகள், ஊரக வேளாண்மை பணி அனுபவத்துக்காக சிட்லிங் மலைக் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ரெஜி ஜார்ஜ், லலிதா ரெஜி ஆகியோரின் முயற்சியால் சிட்லிங் பகுதியில் இயற்கை வேளாண்மைச் சங்கம் 2003-இல் தொடங்கப்பட்டது. இந்த வேளாண் சங்கம் சார்பில் காய்கறி உற்பத்தி, சிறு தானியங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக தயாரித்தல், இயற்கை முறையிலான பூச்சி விரட்டிகள், பருத்தி ஆடைகள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகின்றன.
 இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்கள், இயற்கை விவசாயம் உள்ளிட்டவைகள் குறித்து கல்லூரி மாணவிகள் நேரடியாக கள ஆய்வு செய்து, தேவையான வேளாண் குறிப்புகளை கேட்டறிந்தனர். இதில், இயற்கை வேளாண்மை சங்க ஊழியர் மஞ்சுநாத், விவசாயி சுந்தர ராமய்யா ஆகியோர் இயற்கை விவசாயம் குறித்து, வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com