பெனுகொண்டாபுரம் ஏரியை நிரப்பக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பெனுகொண்டாபுரம் ஏரியை நிரப்பக் கோரி திங்கள்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பெனுகொண்டாபுரம் ஏரியை நிரப்பக் கோரி திங்கள்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பெனுகொண்டாபுரம் ஏரியின் மொத்த பரப்பளவு 504.8 ஏக்கர். இந்த ஏரியின் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியின் முழுக் கொள்ளவு 16 அடியாகும்.

பாரூர் பெரிய ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை முழுமையாகக் கொண்டு பெனுகொண்டாபுரம் ஏரியை நிரப்பக் கோரி, நீர்ப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை மத்தூர் பயணியர் மாளிகை முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் சங்க உறுப்பினர் ராமன் வரவேற்றார். கோகுல் முன்னிலை வகித்தார்.

நீர்ப் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.சௌந்தரராஜன் தலைமை வகித்துப்

பேசியது:

1991 -ஆம் ஆண்டிலிருந்து தடையின்றி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அணை நிரம்பியும், பெனுகொண்டாபுரம் ஏரி நிரப்பப்படவில்லை. நிகழாண்டு பலத்த மழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் இதுவரை பெனுகொண்டாபுரம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இந்த ஏரி முழுமையாக நிரம்பினால்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஒட்டப்பட்டி, மாதம்பதி, சந்தம்பட்டி வாலிப்பட்டி கொக்காரப்பட்டி, கொடமண்டபட்டி, சுண்ணாம்பட்டி, நத்தகயம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

எனவே, பெனுகொண்டாபுரம் ஏரியில் 16 அடி வரை முழுமையாகத் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும், பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டு, இந்தப் பகுதி மக்களின் துயர்துடைக்க வேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து, அரூர் கோட்டப் பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் உண்ணவிரதம் இருந்த விவசாயிகளைச் சந்தித்து, பெனுகொண்டாபுரம் ஏரியை முழுமையாக நிரப்பி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com