பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாம்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை

பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாம்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாம்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள நெடுங்கல் அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  பாரூர் ஏரியில் இருந்து பாசன கால்வாய்கள் மூலம் மத்தூர் அருகே உள்ள பெனுகொண்டாபுரம் ஏரிக்குச் செல்கிறது. 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 19 அடிக்கு 140 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.  இதன் மூலம்,  ஒட்டப்பட்டி, மாதம்பதி, கொடமாண்டப்பட்டி, அந்தேரிப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சிகளில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணையில் 40 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்பதால்,  அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் பாசனக் கால்வாய்களிலும், தென்பெண்ணை ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. ஆற்றில் செல்லும் தண்ணீரில் 240  கனஅடி நீர்,  நெடுங்கல் அணை வழியாக பாரூர் ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.  பாரூர் ஏரியின் முழுக் கொள்ளளவான 15.60 அடிக்கு தண்ணீர் உள்ளதால், ஏரியில் இருந்து கால்வாய்கள் மூலம் இணைப்பு ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கால்வாயில் சென்ற தண்ணீர் மூலம் பெனுகொண்டாபுரம் ஏரிக்கு நிரம்பத் தொடங்கியது.
      கடந்த நவ.30-ம் தேதி ஏரியின் நிரம்பியதால்,  பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  இதனிடையே திங்கட்கிழமை 2-வது முறையாக ஏரி நிரம்பியது.  தற்போது கால்வாய்கள் மூலம் பாம்பாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது.  கால்வாய் அகலப்படுத்திருந்தால், பாம்பாறு அணையில் தண்ணீர் விரைவாக நிரம்பி இருக்கும் என்கின்றனர் அப் பகுதி விவசாயிகள்.  இதுதொடர்பாக பாம்பாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது,  தற்போது கால்வாயில் தண்ணீர் குறைந்த அளவே செல்கிறது. பாரூர் ஏரியில் இருந்து பெனுகொண்டாபுரம் ஏரி கால்வாய்,  இங்கிருந்து பாம்பாறு அணை வரை செல்லும் நீர் கால்வாய்களை அகலப்படுத்த வேண்டும். இதன் மூலம் தண்ணீர் விரைவாக நிரம்பும்.  இதனால் பாம்பாறு அணையின் கீழ் பாவக்கல், முன்றாம்பட்டி, கொண்டாம்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர்த் தேவையும்,  4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com