பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்து கொள்ள வழிகாட்டுதல் மையம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்து கொள்ள வழிகாட்டுதல் மையம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்துகொள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் வழிகாட்டுதல் மையங்களை அமைக்க வேண்டும் என்றார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்துகொள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் வழிகாட்டுதல் மையங்களை அமைக்க வேண்டும் என்றார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலர்கள் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கும் திட்டம் துரிதப்படுத்தும் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை வங்கிகள் மற்றும் வருவாய்த் துறை அடங்கிய தகவல் மற்றும் வழிகாட்டுதல் மையம், ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்(பொறுப்பு) சு.ராமதாஸ், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் பதிவுகள், துரிதமாக கடன் வழங்கும் முறைகள் குறித்துப் பேசினார்.
வேளாண்மை துணை இயக்குநர்கள் த.லோகநாதபிரகாசம், மு.சுப்பையா ஆகியோர் காப்பீட்டுத்திட்ட செயலாக்கம் குறித்து எடுத்துக் கூறினர்.  
ரபி பருவத்தில் அறிவிக்கப்பட்ட வட்டாரங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள் வாரியான பயிர் விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு உண்டான பிரீமியம் தொகை செலுத்தி கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளை இத்திட்டத்தில் இணைத்துக் கொண்டு பயன் பெற துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு வழங்கிய இலக்கின்படி சாதனை அடைய தெரிவிக்கப்பட்டது.
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com