போடிநாயக்கன்பட்டியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

ராசிபுரம் அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடிநாயக்கன்பட்டி, ஒணாங்கரடு உள்ளிட்ட பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை குறைந்த அளவில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற இடங்களில் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் போதிய குடிநீர் வழங்கக் கோரி அந்தப் பகுதியினர் ராசிபுரம்-சேந்தமங்கலம் சாலையில் போடிநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், காவல் துறையினர் நிகழ்விடம் சென்று பொதுமக்களை சமரசப்படுத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டனர்.
எம்பி., குடிநீர் விநியோகம்: இந்தப் பகுதி மக்கள் மறியல் செய்ததையடுத்து, நாமக்கல் எம்பி., பி.ஆர்.சுந்தரம் ஏற்பாட்டில் உடனடியாக அப்பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அன்னை செல்லம்மாள் பள்ளியின் 11-ஆவது ஆண்டு விழா
குமாரபாளையம், ஏப். 22: குமாரபாளையம் அன்னை செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பவானி - குமாரபாளையம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் விஜயன், பரணி, வழக்குரைஞர் கே.சரவணமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய வானொலியின் சென்னை, கோவை பண்பலை நிகழ்ச்சி அமைப்பாளர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து, கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளான தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com