அடிப்படை வசதிகள் இல்லாத ஏற்காடு சுற்றுலாத் தலம்

ஏற்காட்டுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், வாரவிடுமுறை நாள்களில் சுமார் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத ஏற்காடு சுற்றுலாத் தலம்

ஏற்காட்டுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், வாரவிடுமுறை நாள்களில் சுமார் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இங்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இன்றி சுற்றுலாப் பயணிகள் தவிக்கின்றனர். ஏற்காடு பேருந்து நிலையம், லேடி சீட், பக்கோட பார்வை முனை, சேர்வராயன் கோயில் உள்ளிட்டப் பகுதிகளிலும் குடிநீர் மற்றும் கழிப்பறைகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் அவதியடைகின்றனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் மலைப்பாதை நுழைவுக் கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, கார்களுக்கு ரூ.30, வேன்களுக்கு ரூ.50 செலுத்த வேண்டியுள்ளது.

அதேபோல படகு இல்லம், மான்பூங்கா, மீன் அருங்காட்சியகம், அண்ணாபூங்கா ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பொட்டானிக்கள் கார்டன் ஆகியவற்றை பார்வையிட நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது. சேர்வராயன் கோயில் பகுதியில் வாகன நுழைவுக் கட்டணம் என பல இடங்களில் கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 என கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

ரோஜா தோட்டம் தாவரவியல் பூங்காவை பார்வையிட குழந்தைகளுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதி இல்லாதது, சுற்றுலாப் பகுதிகளில் சாலையோர கடைகள்

ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் பயன்படுத்தமுடியாத அளவு நிழற்கூடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லாததால் குப்பைக் கழிவுகளுடன் சுற்றுலாப் பகுதி காட்சியளிக்கிறது. பொது இடங்களில் ஆடு, கோழி, மீன் வெட்டப்படுவதால் அதன் கழிவுகள் அருகே சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் நிலை உள்ளது. சுகாதாரமற்ற உணவகங்கள், உணவுப் பொருள்கள் விற்பனையால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், ஏற்காட்டில் தங்கும் விடுதிக் கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுடன் வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாப் பகுதிகளை முழுமையாகப் பார்க்க சுற்றுலா வாகனங்களுக்கு ரூ.850 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்படுவதால் ஏழைகளின் ஊட்டி ஏற்காடு என்பது பெயரளவில் தான் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com