பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா

பரமத்தி வேலூர், பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீ மிதித் திருவிழாவில் மே 1-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பரமத்தி வேலூர், பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீ மிதித் திருவிழாவில் மே 1-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 இந்தக் கோயில் திருவிழா கடந்த 25-ஆம் தேதி கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 30 ஆம் தேதி வரை தினமும் யானை, குதிரை, காமதேனு, சர்ப்பம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
 மே மாதம் 1-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், 2-ஆம் தேதி பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 3-ஆம் தேதி அலகு போடுதல், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 4-ஆம் தேதி கம்பம் எடுத்து ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன.
 ஏற்பாடுகளை பேட்டை புதுமாரியம்மன் கோயில் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com