ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ராணுவக் கல்லூரியில் 8ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

ராணுவக் கல்லூரியில் 8ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவக் கல்லூரியில் 2017ஆம் கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வரும் டிசம்பர் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 7ஆம் வகுப்புப் பயிலும் அல்லது தேர்ச்சி பெற்ற 11 முதல் 13 வயதுடையவராக இருக்க வேண்டும்.
 இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை, தி கமாண்டன்ட், ஆர்ஐஎம்சி, டேராடூன்-248003 என்ற முகவரிக்கு கட்டணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பொதுப் பிரிவினருக்கு ரூ.600, பட்டியல், பழங்குடியின வகுப்பினருக்கு ரூ.555 எனவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இத்தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-600003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக எழுத்துத் தேர்வு நடக்கும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com