நம்பிக்கை இல்லா தீர்மானம்: மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு விரைவில் விளக்கமான பதில்: அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு

தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு விளக்கமாகப் பதில் அளிக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி.
 முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கான இடம் தேர்வு குறித்த ஆய்வு நாமக்கல் அருகே கருப்பட்டிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில் அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா ஆகியோர் இடத்தைப் பார்வையிட்டனர்.
 ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் செப்டம்பர் மாதம் 19}ஆம் தேதி முதல்வர் தலைமையில் சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்காக நாமக்கல் அருகே கருப்பட்டிபாளையம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் வறட்சி காரணமாக, ஆழ்துளைக் கிணறுகளை நம்பி உள்ள விவசாயிகளுக்கும், மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கும், இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதன்படி, நிகழாண்டு 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். இதில் தட்கல் முறையில் 10,000 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும். தட்கல் முறையில் மின் இணைப்பு கேட்டு 10,000}க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
 பின்னர், அமைச்சரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மீது தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதில் கூறுகையில், மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு விளக்கமாகப் பதில் அளிக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என்றார்.
 ஆய்வின்போது, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com