"கிராமப்புற மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'

கிராமப்புற மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்திக்கொண்டு பொருளாதார மேம்பாடு அடைவதோடு, வங்கியின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கேட்டுக் கொண்டார்.

கிராமப்புற மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்திக்கொண்டு பொருளாதார மேம்பாடு அடைவதோடு, வங்கியின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கேட்டுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பவித்திரத்தில் இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா புதன்கிழமை  நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
விழாவுக்கு தலைமை வகித்து, வங்கிக் கிளையை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசியது: ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இத்தகைய சூழ்நிலையில், அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம். எனவே, இதுவரை வங்கிக் கணக்கு தொடங்காதவர்கள் உடனடியாக வங்கிக் கணக்கு தொடங்குவதோடு, அதில் ஆதார் எண்ணையும் இணைத்துக்கொள்ள வேண்டும். 
வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு தகுதிக்கேற்ப பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் வங்கிக் கணக்கின் மூலமாகவே பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.
வங்கி வாடிக்கையாளர்களின் வரவு, செலவு பணப் பரிவர்த்தனைகளை பொருத்து வங்கியின் வளர்ச்சியும், அவற்றின் சேவையும் மக்களுக்கு அதிகளவில் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் வங்கி சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தி கொண்டு, பொருளாதார மேம்பாட்டுக்கும், வங்கியின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்திட வேண்டும். வங்கிகளும் மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
 நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.முத்தரசு வரவேற்றார். இந்தியன் வங்கி சேலம் மண்டல துணை பொது மேலாளர் சி.ஆர்.கோபிகிருஷ்ணன்  விளக்கவுரையாற்றினார். நாமக்கல் கிளையின் உதவி பொது மேலாளர் சந்திரசேகரன், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வங்கி கிளை மேலாளர் ஆர்.லாவண்யா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com