பாபர் மசூதி இடிப்பு தினம்: இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ, தமுமுக, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் நாமக்கல்லில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ, தமுமுக, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் நாமக்கல்லில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பாபர் மசூதி கட்ட வலியுறுத்தி நாமக்கல் அண்ணா சிலை அருகில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ரஹமத்துல்லா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும். வழக்கில் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. 
முன்னதாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் பேசினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக் நவீத், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் முஹமது முபீன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்குதல், குற்றவாளிகளை தண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்(தமுமுக) சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் டி.பாஷா தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் எம்.ஹூசைன் பாஷா, ஜெ.பரூக் அராபத்  உள்ளிட்டோர் பேசினர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 
 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்கக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாமக்கல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலர் வி.சையத் அகமது கபிர் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. மாநில துணைச்செயலர் ஏ.சிக்தர் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com