"மின் உற்பத்தி துறையில் கட்டுமான பொறியாளர்களின் தேவை அதிகரிப்பு'

மின் உற்பத்தி துறையில் கட்டுமானப் பொறியாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது என தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழக,

மின் உற்பத்தி துறையில் கட்டுமானப் பொறியாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது என தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழக, உயர் அழுத்த மின் உற்பத்தி திட்ட பயிற்சி, ஆராய்ச்சி நிறுவன முதுநிலை மேலாளர் வி.சுந்தரராஜன் கூறினார்.
 குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியின் கட்டடப் பொறியியல்துறை சார்பில் மாணவர் வழிகாட்டி கருத்தரங்கம்- ஸ்பார்டான்ஸ் 2017 எனும் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில், வி.சுந்தரராஜன் பேசியது:-
 புதிய கருவிகள் கண்டுபிடிப்புகளின் காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துகொண்டே வருகிறது. இதனை சமாளிக்க காற்றாலை, அனல் மின்சாரம், நீர் மின்சாரம், சூரிய சக்தி ஆகிய வளங்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
 மேட்டூரில் தண்ணீர் சேமித்து வைக்கப்படும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்காக விசையாழியின் வாயிலாக நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் மின் உற்பத்தி நிறுவனத்தில் 120 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, சித்தார், ஊராட்சிக்கோட்டை ஆகிய 3 இடங்களிலும் நீர்மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
 மின் உற்பத்தி நிலையங்களில் பயிற்சி, பணிவாய்ப்புகள் உள்ளன. இந்தத் துறையில் கட்டுமானப் பொறியாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துகொண்டு வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றார்.
 விழாவுக்கு கல்லூரி முதல்வர் வி.கே.சண்முகநாதன் தலைமை வகித்தார். முதன்மையர் எஸ்.கிறிஸ்டியன் ஜான்சன், கட்டடப் பொறியியல் துறைத் தலைவர் எஸ்.சண்முகசுந்தரம், மாணவர் மன்ற நிர்வாகிகள் அகஸ்டியன் ராஜ், விமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com