இன்று நாமக்கல் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பங்கேற்பு

நாமக்கல் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா, விருது வழங்கும் விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18)  நடைபெறவுள்ளது.

நாமக்கல் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா, விருது வழங்கும் விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18)  நடைபெறவுள்ளது.

இதில், தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பங்கேற்று, மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனுக்கு "தமிழ்ப் பேரறிஞர் விருது' வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மஹாலில் காலை 9.30 மணிக்கு விழா தொடங்குகிறது. நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவர் மருத்துவர் ரா. குழந்தைவேல் தலைமை வகிக்கிறார். மதிப்புறு தலைவர் வ.சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். ஒருங்கிணைப்பாளர் மா.தில்லைசிவக்குமார் வரவேற்கிறார்.
உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசுகிறார். "தமிழர் கண்ட வாழ்வியல்' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து, பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. "மகாகவி' என்ற தலைப்பில் முனைவர் கோபால.நாராயணமூர்த்தி, "புரட்சிக்கவி' என்ற தலைப்பில் செல்வ.செந்தில்குமார், "காந்தியக்கவி' என்ற தலைப்பில் கோ.யுவராஜா, "திரைக்கவி' என்ற தலைப்பில் முனைவர் அனுராதா, "மக்கள் கவி' என்ற தலைப்பில் கவிஞர் உமா மகேஸ்வரி ஆகியோர் கவிதை வாசிக்கின்றனர்.
விருது வழங்கும் விழா மாலை 6 மணிக்கு கல்பதரு நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. நாமக்கல் தமிழ்ச் சங்க அமைப்பின் தலைவர் அரசு பரமேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசுகிறார்.  இதில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பங்கேற்று, நாமக்கல் தமிழ்ச் சங்க இணையதளத்தைத் தொடக்கிவைத்து, மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனுக்கு தமிழ்ப் பேரறிஞர் விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.பாஸ்கரன் விழாப் பேருரை ஆற்றுகிறார்.  நாமக்கல் தமிழ்ச் சங்க இணைச் செயலர் மருத்துவர் ப.எழில்செல்வன் நன்றி கூறுகிறார்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில்
விண்ணப்பித்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
நாமக்கல், ஜூன் 17:  கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கை ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலி இடத்தில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இதனால் இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்த மாணவர்கள் வரும் 20-ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேர்க்கைக்கான மாணவர்களைத் தேர்வு செய்யும் பணி கடந்த மாதம் 31-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் ஒரு சிலர் பள்ளி சேர்க்கைக்கு வராத காரணத்தால் காலி இடங்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளிகளில் வரும் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு துறை சார்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் சேர்க்கை வழங்கப்படவுள்ளது.
எனவே, ஏற்கெனவே இணையம் வழியாக விண்ணப்பித்து சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படாத மாணவர்களின் பெற்றோர் வரும் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று, காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com