தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் அதிக மாணவர்களை பங்கேற்க வைக்க முடிவு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், மாவட்டம் முழுவதும் உள்ள பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை அதிக

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், மாவட்டம் முழுவதும் உள்ள பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்ள செய்வது என அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட 2-ஆவது மாநாடு ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் வெங்கடேஸ்வரா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அறிவியல் பரப்புவோம் என்ற பாடலுடன் மாநாடு தொடங்கியது. மாவட்டத் தலைவர் எம்.சிற்றரசு தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் எஸ்.மேகநாதன் வரவேற்றார்.
அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எம்.தியாகராஜன் மாநாட்டை தொடக்கி வைத்து எங்கள் தேசம், எல்லோருக்குமான தேசம், (அறிவியல் பார்வையில் இந்தியா) என்ற தலைப்பில் பேசினார்.
இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மாவட்டச் செயலர் என்.சுரேந்தர், வரவு-செலவு அறிக்கையை பொருளர் எஸ். ரகோத்தமன் சமர்ப்பித்தனர். அறிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது.
35 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து 13 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் மாவட்டத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து, அதற்கென தனித்தனியே ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தல். ஆசிரியர்களுக்கு அறிவியல் செயல்பாடுகளுக்கான பயிற்சி வழங்குவது, கல்லூரிக் கிளைகளை அமைப்பது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை அமைத்தல். அனைத்து ஒன்றியங்களிலும் துளிர் இல்லங்களை அமைத்தல். உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்டம் முழுவதும் உள்ள பல பள்ளிகளை கலந்துகொள்ள செய்வது. துளிர் திறனறிதல் தேர்வில் மாவட்டம் முழுவதும் உள்ள பல பள்ளிகளை
கலந்துகொள்ள செய்வது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com